சென்னையில் தொழிற்சங்கங்கள் போராட்டம் காரணமாக குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. போக்குவரத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னையில் குறைவான பேருந்து சேவையே இயக்கப்படுகிறது.
இதனால் பள்ளி மற்றும் பணிக்குச் செல்வோம் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.