வரும் 18-ம் தேதி தகவல் தொடர்பு தொழில்நுட்பம், மாணவர்களின் உடல்நலன், மனநலன் சார்ந்து பயிற்சி வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் எனவும், அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஒரு வாரம் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களைக் கையாளுதல், மின்னணு பதிவேடுகளை பராமரித்தல், மாணவர்களின் மனநலன் அறிந்து செயல்படுதல் உள்ளிட்டவற்றுக்காக ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.