உதயநிதிக்கு எந்த பொறுப்பு வழங்கினாலும், அவரது தாத்தா, அப்பா போல் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தஞ்சை சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி கட்டிடங்களை மறு சீரமைப்பு செய்வதற்கு 75 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆட்சியில் முதல் முறையாக 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் நபார்டு வங்கி மூலம் நிதி பெறப்பட்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டிடங்கள் சீரமைப்பு செய்யப்படும். நேற்று சென்னை மாணவி தற்கொலை குறித்து கேட்தற்கு, ஏற்கனவே பல விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சமுதாயத்தில் இதுபோல் தொடர்ந்து நடப்பது என்பது வேதனை அளிப்பதாகவும், மாணவிகளுக்கு அதிக அளவில் ஆலோசனை தேவைப்படுகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் எந்த ஒரு பொறுப்பைக் கொடுத்தாலும் அவரின் தாத்தா, அப்பா போல் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூப்பிப்பார் என அவர் தெரிவித்தார்.