ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாத வளர்மதி

 

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்த நிலையில் வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமியை அண்ணன் எனக் கூறி அவரது அனைத்து பதவிகளையும் கூறிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை குறிப்பிடாமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி செயலாளருமான வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். அப்போது, வரலாற்று சிறப்புமிக்க செயற்குழு, பொதுக்குழு கூட்டத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ள கட்சியின் அவைத்தலைவர், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி, வருகை தந்துள்ள ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களே, தலைமை கழக நிர்வாகிகளே, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

மேலும், காலையில் இருந்து நீங்கள் எல்லாம் இங்கு வந்து உள்ளீர்கள் என கூறிய அவர், எம்ஜிஆர் பாடல் தான் நியாபகம் வருகிறது என்றும், “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதிமறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் தயங்காதே” என குறிப்பிட்டு, அந்த தலைவர் இருக்கிறான்.. வருவான், வெளியே வருவான், வெகு விரைவில் வருவான் என குறிப்பிட்டார்..இந்த நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஓ.பி எஸ் பெயரை குறிப்பிடாதது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!