நாடு முழுவதும் உள்ள நில ஆவணங்களை ஆங்கிலம், இந்தி உள்பட 22 மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கவுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய நில வளத்துறை இணைச் செயலாளர் சோன்மோனி போரா, “தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் இத்திட்டம் சோதனை முயற்சியாக தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் பத்திரப்பதிவு துறையில் மொழி பிரச்சனை தீரும்” என்றார்.