உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு, கோவில்கள் நிறைந்த மதுரா நகரில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று பிரச்சாரம் செய்கிறார்.
உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜக நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கி வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தநிலையில் இன்று கோவில்கள் நகரங்களில் ஒன்றான மதுராவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் ஜாட் சமூக மக்களை குறிவைத்து பாஜக பிரச்சாரம் செய்யக்கூடும் என்றும், குறிப்பாக இந்துத்துவத்தை முக்கியப்படுத்தும் வகையில் கிருஷ்ணர் கோவில் அமைப்பது பற்றிய தகவல் வெளியிடலாம் என கூறப்படுகிறது.
விவசாயிகளின் ஒன்றரை ஆண்டுகள் போராட்டத்திற்கு பின், பின் மேற்கு உத்தரபிரதேச பகுதியில் இந்த பிரச்சாரத்தை பாஜக நடத்துவது குறிப்பிடத்தக்கது.