நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்- அரசாணை வெளியீடு

ஏழை மக்களின் நலனுக்காக நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற ஏழை மக்களின் நலனுக்காக 100 கோடி ரூபாய் மதிப்பில், இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திறன் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் பணி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு நகரங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், வெள்ளகால மீட்பு பணி, பசுமையாக்கல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகள் தினக்கூலி அடிப்படையில் வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு, ஒரு வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்படும் என்றும், திட்ட பயனாளிகளுக்கான வயது வரம்பு 18 முதல் 60 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயனாளிகள் இந்த வேலைவாய்ப்பு அட்டை மூலம், அவரவர் திறனுக்கேற்ற வேலையை சம்மந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்பிடம் கேட்டுப் பெறலாம் எனவும், இந்த வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!