வானகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தல்.

சென்னை கோயம்பேடு, மதுரவாயல் மற்றும் வானகரம் சாலைகள் முக்கிய சாலைகளாக பார்க்கப்படுகிறது. தினந்தோறும் வெளி மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் வந்து செல்கின்ற நிலையில் தினந்தோறும் காலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது..குறிப்பாக கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது அப்போது கோயம்பேட்டில் இருந்து வானகரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லக்கூடிய மற்றும் இதர பணிகளுக்கு செல்லக்கூடியவர்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றது.குறிப்பாக அந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்சும் சிக்கி கொண்டது.இந்த நிலையில் மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. ஆக இப்பவே இவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருந்தால் பொதுக்குழு நடைபெறும் போது எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று வாகன ஒட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!