அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் ராணுவ இரு வார கூட்டுப் பயிற்சி

 

அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் ராணுவ இரு வார கூட்டுப் பயிற்சி மணிலாவில் தொடங்கியது. கொரோனாவால் 2020-ம் ஆண்டு ரத்தான நிலையில் கடந்த ஆண்டு ஆயிரத்து 700 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற பயிற்சி நடந்தது.

இந்தநிலையில் தற்போது 9 ஆயிரம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தொடக்க விழாவில் பேசிய பிலிப்பைன்சுக்கான அமெரிக்க தூதர் ஹீதர் வரியவா,  இந்த ஒருங்கிணைந்த பயிற்சியின் மூலம், அமெரிக்கா- பிலிப்பைன்ஸ் உறவு மேலும் உறுதிப்படும் என்றார்.

மேலும்,புதிய மற்றும் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் பொருத்தமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இரு நாடுகளும் கூட்டுப் பயிற்சியை தொடங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!