அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென்கொரியா பயணம்

 

தென்கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்குள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வரும் 24ஆம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ளது.

இதனையொட்டி, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜோ பைடன், முதலில் தென்கொரியா சென்றுள்ளார்.

அங்கு அத்பர் யூன் சுக் யோலுவைச் சந்தித்தார். இருவரும் தலைநகர் சியோலில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த சில ஆசிய நாடுகளை ஆதரவாளர்களாக மாற்ற இந்த பயண வாய்ப்பை பைடன் பயன்படுத்துவார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!