வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு வழங்கினார்.  தீரன் சின்னமலை அவர்களைப் போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி 1805 அன்று சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார் என கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் வீர தீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டி. திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கும், சேலம் மாவட்டம் சங்ககிரிக் கோட்டையில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்திலும், அவர்களின் நினைவுத்தூண் அமைந்துள்ள இடத்திலும் அன்னார் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளைப் போற்றுகின்ற வகையில் 03.08.2022 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Translate »
error: Content is protected !!