விஜயகாந்த் பிறந்தநாள் விழா – நேரில் சந்திக்க தொண்டர்கள் வருகை

தேமுதிக நிறுவனத் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்தை தொண்டர்களை இன்று நேரில் சந்திக்கிறார்.

விஜயகாந்தை நேரில் சந்திக்க மாநிலம் முழுவதும் இருந்து தேமுதிகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தொண்டர்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கேக் வெட்டுகிறார். தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வருகை முன்னிட்டு தேமுதிக அலுவலகத்தில் 30 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!