வரும் 8ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் விக்ரம் படம்

கமல் நடிப்பில் வெளியாகி பெறும் வரவேற்பைப் பெற்ற ’விக்ரம்’ திரைப்படம், வரும் 8ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம், 4 வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படம், உலகளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கமலின் புரோமோ வீடியோவுடன், வரும் 8ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!