விஸ்வாசம் படத் தயாரிப்பாளர் அலுவலகத்தில் சோதனை

விஸ்வாசம் படத் தயாரிப்பாளர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அஜித் நடித்த விசுவாசம் பட தயாரிப்பாளரான சத்தியஜோதி பிலிம்ஸ் அலுவலகம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இயங்கி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோர் இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் தியாகராஜன் தொடர்புடைய இடத்திலும் சோதனை நடைபெற்ற்து.

Translate »
error: Content is protected !!