ரஷ்யா ஆக்கிரமித்திருந்து பின்னர் வெளியேறிய நகரங்களில் கிடக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை தன்னார்வலக் குழுவினர் சேகரித்து வருகின்றனர்.
கார்கீவ் நகரில் இதுவரை 60 ரஷ்ய வீரர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களின் அடையாளங்களை சரி பார்க்க டிஎன்ஏ முதல் பச்சை குத்தியிருப்பது வரை அனைத்தையும் பயன்படுத்தி வருகிறது.
இந்த உடல்கள் அனைத்தும் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள், சில சமயங்களில் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாகவும், மற்ற நேரங்களில் உக்ரேனிய வீரர்களின் உடல்கள் பரிமாற்றங்களிலும் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.