அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற மாவட்ட செயலாளர்களின் கருத்தை அடுத்து மூன்று நாட்களாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர், இன்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை சந்திக்க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்,எம்எல்ஏ மனோஷ் பாண்டியன், விருதுநகர் மாவட்ட செயலாளர், சிவகாசி முன்னாள் எம்எல்ஏ பாலகங்கா, அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரெத்னசபாபதி , திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெஸ்சாண்டர் , வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன் ஆகியோரும் பசுமைவழிச் சாலை யில் உள்ள அவரது இல்லத்தில் வந்தனர் அவர்களுடன் மூன்றாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்ட பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
பின்னர் அதிமுக தலைமை அலுவலகம் சென்ற பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் முன்வைக்கக்கூடிய தீர்மானங்களை தயார் செய்திருந்த குழுவினருடன் சந்தித்து தீர்மானங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.