ஒரு மாதத்திற்கு உள்ளாக மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாதபட்சத்தில் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மின்வாரிய ஊழியர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
சென்னையில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேஷன் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. அப்போது ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேஷன் அமைப்பின் பொதுச் செயலாளர் சேக்கிழார், மின்வாரியத்தில் உள்ள 40 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தெரிவித்தார். 5 ஆயிரம் கேங்மேன்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறிய அவர்,ஒப்பந்த பணியாளர்களை நிரந்தப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பகுதி நேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறினார்.