பொன்னமராவதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொன்னமராவதியில் 217.63 மதிப்பீட்டில் வாரச்சந்தையை மேம்பாடு செய்வதற்கான திட்டத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் பூமிபூஜை செய்தார். பொன்னமராவதி பேரூராட்சியில் வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் 7 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியின் நீண்ட நாள் கோரிக்கையான வாரச்சந்தை மை மேம்பாடு செய்வதற்கு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 217.63லட்சம் மதிப்பீட்டில் பொன்னமராவதி வாரச்சந்தையை மேம்பாடு செய்வதற்கான பூமிபூஜை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி போடப்பட்டது.அதனைத்தொடர்ந்து பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக 7 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணையினை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
இவ்விழாக்களில் புதுக்கோட்டை மாவட்டஆட்சியர் கவிதா ராமு, பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, பொன்னமராவதி திமுக பேரூர்கழக செயலாளர்அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி:
திமுக அரசு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது .தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளிலும் நகர்ப்புற பகுதிகளிலும் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பொன்னமராவதி வாரச்சந்தையானது தரைக்கடையாக இருந்ததால் மழை காலங்களில் மிகவும் சிரமப்பட்ட வியாபாரிகள் அங்கு கடையாக கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அதன்படி அதற்கான கட்டுமான பணிக்காக 2 கோடியே 17. 63 லட்சம் மதிப்பீட்டில் பணி தொடங்கியுள்ளது.விரைவில் வாரச்சந்தை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வரும், அதேபோல பொன்னமராவதி பேரூராட்சியில் ஏழு பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு கட்டும் பணிக்காக ரூ 2 லட்சத்து 10 ஆயிரத்திற்க்கு மானியத்துடன் கூடிய கட்டுமானப் பணிக்கான பணி ஆணையை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கவும், இடம் இல்லாதவர்களுக்கு இடப்பட்டா வழங்கும் பணிக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருகிறோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் துறையை உருவாக்க தொழில் முனைவோர் உடன் பேசி வருகிறோம். விரைவில் தொழில் சாலைகள் பொன்னமராவதியில் தொடங்கப்படும். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை தன்னை சந்திக்க வருகின்ற தொழில்முனைவோர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் போதிய இடம் இருப்பதால் அறிவுறுத்தி வருகிறார்.திருமயத்தில் அரசு கல்லூரி கல்லூரி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதற்கான கட்டிடம் தொடங்குவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
விரைவில் கட்டுமான பணி தொடங்கப்படும், பொன்னமராவதியில் உழவர் சந்தை தொடங்க இடம் தேர்வு செய்துள்ளோம். அதற்கான பணியும் விரைவில் தொடங்கும் என்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற அரசு விழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார்.