மேற்கு வங்கத்தில் பபானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்ஹ்டில் இருந்தே முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். எனினும் 6 மாதத்திற்குள் அவர் சட்டசபை உறுப்பினராக வேண்டும் என்பதால் பபானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பபானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.
தற்போது பபானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே மம்தா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருவதால், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.