நீட் தேர்வு – ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சொல்வதென்ன ?

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தனிச்சட்டம் இயற்றி அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என ஏ.கே ராஜன் குழு தெரிவித்துள்ளது.

இதுகுரித்து நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே ராஜன் குழு சமர்பித்த ஆய்வறிக்கையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம் என்று  பரிந்துரைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியை பெறலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

165 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் உலக நாடுகளில் பின்பற்றப்படும் மருத்துவப்படிப்புகளுக்கான நடைமுறையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!