தி காஷ்மீர் படத்திற்கு ஏன் எங்களிடம் வரி விலக்கு கேட்கிறீர்கள்?

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு ஏன் எங்களிடம் வரிவிலக்கு கேட்கிறீர்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இப்படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் வரிச்சலுகை வழங்கியுள்ளன. அதன்வரிசையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு டெல்லியில் வரிவிலக்கு அளிக்கும்படி கோரிக்கை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏன் எங்களிடம் வரிவிலக்கு கேட்கிறீர்கள் என்றும் அவ்வளவு ஆர்வமாக இருந்தால், படத்தின் இயக்குனரான விவேக் அக்னிஹோத்ரியிடம், அத்திரைப்படத்தை யூடியூப்பில் போடச் சொல்லுங்களேன் எனவும் பதிலளித்துள்ளார். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!