டெல்லியில் அல்ல ஆகிரமிப்பு கட்டிடங்களை பாஜக அகற்றுமா?

டெல்லியில் உள்ள 80 சதவீத ஆக்ரமிப்பு கட்டடங்களையும் பாஜக ஆளும் மாநகராட்சிகள் இடித்து அகற்றிவிடுமா என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். மாநகராட்சிகளை தன் வசம் வைத்துள்ள பாஜக, 3 மாநகாட்சிகளிலும் சட்டவிரோத ஆக்ரமிப்பு கட்டடங்களை புல்டோசர் கொண்டு அகற்றி வருகிறது. இதனால் இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள், ஆக்ரமிப்பு அகற்றத்தை உடனடியாக நிறுத்த கோரி முறையிட்டு வருகின்றனர். இந்தநிலையில், இன்று இப்பிரச்னைக்கு முடிவு கட்டுவது குறித்து எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திட்டமிட்டபடி டெல்லி விரிவாக்கம் செய்யப்படவில்லை என சாடினார். டெல்லியின் 80 சதவீதம் பகுதிகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நகரின் 80 சதவீதம் பகுதிகளில் உள்ள கட்டடங்களும் இடித்து அகற்றப்படுமா என விளாசினார்.

Translate »
error: Content is protected !!