பிரபல ஆன்லைன் பங்கு வர்த்தக செயலியான ஜீரோதா, நேற்று (12ம் தேதி) வர்த்தக நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டது.
இதனால், வாடிக்கையாளர்கள் பங்குகளை வாங்குவதிலோ விற்பதிலோ சிரமம் ஏற்பட்டது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் அந்நிறுவனத்தை குறிப்பிட்டு பதிவிட்ட அதன் வாடிக்கையாளர்கள், இன்றும் தொடருமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் இது சரிசெய்யப்பட்டதாக ஜீரோதா கூறியுள்ளது.