சிறையில் இருந்து வெளிவரும் கைதிகள் மீண்டும் சிறைபடுவதை தடுக்கும் வகையில் அனைத்து கைதிகளுக்கும் ‘சீர்திருத்த சிறகுகள்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த திட்டம் புழல் சிறையில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 30 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி சுயசார்புடன் வாழும் வகையில் சுயதொழில் சார்ந்த ‘தொழில் முனைவோர்’ மேம்பாட்டு பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது.
இந்த விழாவை சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் கனகராஜ் தொடங்கிவைத்தார். சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன், சிறை அதிகாரி இளங்கோ, மனஇயல் நிபுணர் உ.பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.