ரூ.10 செலுத்தினால் மஞ்சப் பை வழங்கும் விற்பனை இயந்திரம்

சென்னை கோயம்பேடு சந்தையில், ரூ.10 செலுத்தினால் துணிப் பை (மஞ்சப் பை) வழங்கும் விற்பனை இயந்திரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் 14 வகை நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதில், மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக ‘மீண்டும் மஞ்சப் பை’ என்ற திட்டத்தை கடந்த டிசம்பா் மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

இந்த மஞ்சப் பை திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் முதல் கட்டமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டது பத்து ரூபாய் நாணயம் அல்லது பத்து ரூபாய் தாள் செலுத்தினால் மஞ்சப்பை தானாக வரும் இயந்திரமானது வைக்கப்பட்டிருந்தது.  ஞாயிற்றுக்கிழமை அது பயன்பாட்டில் இருந்ததாகவும் நேற்றிலிருந்து இயந்திரக் கோளாறு காரணமாக அதன் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அங்கு இருக்கக்கூடிய வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும், நெகிழி பொருட்களுக்கு மாறாக மஞ்சள் பையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் அனைத்து இடங்களிலும் வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கும் நிலையில் முதற்கட்டமாக வைக்கப்பட்டிருந்த இயந்திரமே தற்பொழுது கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இதனை அனைத்து இடங்களிலும் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

 

Translate »
error: Content is protected !!