அதிபர் தேர்தல் முடிவு விவகாரம் – அதிபர் டிரம்ப் முடிவில் திடீர் மாற்றம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குகள் மூலம் மிகப் பெரிய மோசடி நடைபெற உள்ளதாகவும், ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்களின் ஆளுநர்கள் இந்த சதி செயலில் ஈடுபட்டு வருவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார்.வெளிநாட்டு சதியை விட, ஜனநாயக கட்சி ஆளுநர்களை சமாளிப்பது தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என டிரம்ப் தெரிவித்திருந்தார்.தாம் தோற்கும் நிலையில், பொறுப்பை அவ்வளவு எளிதில் ஒப்படைக்க மாட்டேன் நீதிமன்றம் செல்வேன் என டிரம்ப் அறிவித்திருந்தார்.இது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், டிரம்ப் தமது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், வெள்ளை மாளி​கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஊடகத் துறை செயலாளர் கெய்லீ மெக்கானி, தேர்தல் முடிவுகளை அதிபர் அப்படியே ஏற்றுக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!