அந்த தொகுதியில் “சீட்” கிடைக்காவிட்டால்… இந்த பிரமுகர் தான் வருவார்..! காத்து கொண்டிருந்தது பாஜக

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் உதகை, விளவங்கோடு, தளி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கண்டுபிடித்து அறிவிப்பதற்குள் பாஜக பெரும்பாடு பட்டுவிட்டது. தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை மறுநாள் கடைசிநாள் என்பதால் இந்த விறுவிறுப்பு இன்னமும் அதிகரிக்கக் கூடும். ஆனாலும் கூட பாரதிய ஜ்னதா கட்சியால் உதகை, விளவங்கோடு, தளி ஆகிய 3 தொகுதிகளுக்கு இன்று பகல் 12 மணி வரை வேட்பாளர்களை அறிவிக்க முடியாத நிலை இருந்தது.,

தளி சட்டசபை தொகுதியில் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என வேறொரு கட்சி மாஜி எம்.எல்.ஏ கேட்டிருந்தார். அவர் நின்றால் நிச்சயம் தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ. உறுதி என கணக்குப் போட்டு அதிமுக கூட்டணியில் தளி தொகுதியை வாங்கியது பாஜக.

ஆனால் சொந்த கட்சியே தமக்கு சீட் கொடுத்துவிட்டது உங்க கட்சிக்கு நான் வரவில்லை என அந்தர் பல்டி அடித்தார்., அந்த மாஜி எம்.எல்.ஏ. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போனது பா.ஜ.க. இதையடுத்து தளி தொகுதியில் நடிகர் அர்ஜூனை நிற்க வைக்க முயற்சிகள் நடந்தன.

ஆனாலும் நடிகர் அர்ஜூன் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் யாரை வேட்பாளராக போடுவது என்பதில் குழப்பத்தில் இருந்தது பாஜக. இப்போது நாகேஷ்குமார் என்பவர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். உதகமண்டலத்தைப் பொறுத்தவரையில் அங்கே வேட்பாளருக்கான தகுதியானவர்கள் பாஜகவில் இல்லையாம்.

அதனால் பிற மாவட்ட நிர்வாகி ஒருவரைத்தான் உதகையில் நிறுத்தியாக வேண்டிய நிலை உருவானதாம். ஒருவழியாக போஜராஜன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு தொகுதியில் தளி தொகுதியைப் போலதான். அந்த தொகுதியில் சீட் கிடைக்காவிட்டால் தங்களது கட்சிக்கு அந்த பிரமுகர் வருவார் என இலவு காத்து கொண்டிருந்தது பாஜக.

கடைசியாக அந்த கட்சியிலேயே அந்த பிரமுகருக்கு சீட் கிடைத்துவிட்டது. இதனால் விளவங்கோடு தொகுதி வேட்பாளர் யார் என தெரியாமல் விழிபிதுங்கியது பாஜக. இப்போது ஜெயசீலன் என்பவர் வேட்பாளராக்கப்பட்டார். 

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக. அதில் ஒருவர் பாஜகவில் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இளைஞர். அந்த இளைஞர் தேர்தலில் போட்டியிட முடியாது என மறுத்துவிட்டார். இதனால் வேட்பாளர்களை தேடியது பாஜக. தமிழகத்திலும் அப்படித்தான். பரிதாப பாஜக!

Translate »
error: Content is protected !!