*தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்திப்பு. அமமுக – தேமுதிக கூட்டணி உறுதியான நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சந்திப்பு..
*அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் தூக்குப் போட்டு தற்கொலை – கமல் ட்வீட்
*தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் விதிமுறை மீறல்களை தடுக்க தனியார் விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்.,
*தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
*அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் காணொலி காட்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்
*எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலினால் ஜெயிக்க முடியாது, மனுக்கள் வாங்கி வைத்த பெட்டியின் பூட்டை அவர் உடைக்கப்போவதும் இல்லை என புதுக்கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
*வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று மார்ச் 26,27ம் தேதிகளில் பிரதமர் மோடி வங்காளதேசம் பயணம்
*தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கலுக்கான பணிகள் தீவிரம்.,
*பிரதமர் மோடி–ன் முதன்மை ஆலோசகர் திடீர் ராஜினாமா.,
*மகாராஷ்ட்ராவில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியிருக்கிறது – அரசு எச்சரிக்கை.
*இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26ம் தேதி இந்தியா வருகை.,
*தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.,
*தமிழகத்தில் விறுவிறுப்படையும் தேர்தல் பிரசாரம் ! பல்வேறு கட்சியினரும் வாக்கு சேகரிப்பு.,
*சாதி பார்த்து ஓட்டுப் போடாதீர்கள்; சாதிப்பவனைப் பார்த்து ஓட்டுப் போடுங்கள்: கமல்ஹாசன்.,
*திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் நல்லதம்பி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.,
*புதுச்சேரியில் பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக முதல்கட்டமாக ஒன்பது பேரை கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.,
*ஆலங்குடி தொகுதியில் புதிதாக கட்சியில் சேர்ந்தவருக்கு சீட் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கரை வேட்டியை முன்னாள் அமைச்சர் நினைவிடம் முன்பு தீ வைத்து கொளுத்திவிட்டு திமுக கரை வேட்டியை கட்டிக்கொண்டு சென்ற தொண்டர்!.,
*தேனாம்பேட்டை, அம்பத்தூர், அண்ணாநகர், அடையார், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருக்கிறது..,