உலகில் அதிக காலம் பதவியில் இருந்த பஹ்ரைன் பிரதமர் கலிஃபா மரணம்

உலகின் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார்.

இது தொடர்பாக, அந்த நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவின் மயோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஹ்ரைன் பிரதமர், அங்கு காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 84.

அவரது மறைவை அடுத்து ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா, 1935ம் ஆண்டு நவம்பர் 24ம் ஆண்டு பிறந்தார். பஹ்ரைன் இளவரசராக இருந்த அவர், 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 15இல் பஹ்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு, அதன் பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகிலேயே மிக அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமை கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபாவுக்கு உள்ளது.

Translate »
error: Content is protected !!