காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு வங்கத்தின் நிலைமையை முழுவதுமாக மாற்றி அமைப்போம் – அமித்ஷா ஆவேசம்

கொல்கத்தா,

மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு வங்கத்தின் நிலைமையை முழுவதுமாக மாற்றி அமைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.

தெற்கு24 பர்கானாஸ் மாவட்டத்தில் முதல்வர் மமதா பானர்ஜி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் ஒரே நேரத்தில் யாத்திரைகளை நடத்தினர். பாஜகவின் 5-வது பரிவர்த்தன் யாத்திரையை அமித்ஷா தொடங்கி வைத்து பேசியதாவது:

மேற்கு வங்கத்தை தங்க வங்கமாகஒளிமயமான வங்கமாக மாற்றுவதற்குதான் பாரதிய ஜனதா கட்சி போராடி வருகிறது. தேர்தலுக்குப் பின்னர் மமதா பானர்ஜி அரசாங்கத்தை தூக்கி எறிந்த உடன் பாஜக ஆட்சி அமைப்பதற்கு அப்பால் இந்த மாநிலத்தின் நிலைமையைமக்களின் ஏழ்மையை மாற்றுவதையே முதன்மை இலக்காக கொள்ளும்.

மேற்கு வங்கத்தின் பெண்களின் தற்போதைய நிலைமையை மாற்ற பாஜக பாடுபடும். இவ்வாறு அமித்ஷா கூறினார். முன்னதாக ஜெய்ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே ஆகிய முழக்கங்களை அமித்ஷா எழுப்பினார். கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஜெய் ஶ்ரீராம் முழக்கங்களை எழுப்பியதால் பேச முடியாது என முதல்வர் மமதா பானர்ஜி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!