குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று, தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று ஹைதராபாத்தில் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தெலுங்கானா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் உடனடி நிவாரணமாக 10,000 ரூபாய் வழங்கப்படும். முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் ஓரளவு சேதமடைந்த வீடுகளுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.


அத்துடன், அரிசி மற்றும் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இழந்து தவிக்கும் மக்களின் நலன் கருதி, 10,000 ரூபாய் நிதி உதவி உடனடியாக விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கை லட்சங்களில் இருந்தாலும், எத்தனை பேருக்கும் உதவிக்கரம் நீட்ட அரசு தயாராக உள்ளது. உதவி பெறும் குடும்பங்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என,  உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள்ளை தெலுங்கானா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோல், வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உடனடியாக சரிசெய்து மீட்டெடுக்கவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!