சென்னையில் நடந்த ஓவியப்போட்டி மற்றும் திருக்குறள் போட்டியில் ராயப்பேட்டையில் உள்ள எஸ்விஎம் பள்ளி மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர். அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
ஜனவரி 24ம் தேதியன்று தேசிய பெண் குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சமூக நலத்துறை அமைப்பைச் சேர்ந்த ‘எம்எஸ்கே குழு’ நிறுவனம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வி அறிவைப் பெறுதல் என்ற தலைப்பில் ‘ஸ்லோகன்’ எழுதும் போட்டி ஒன்றை நடத்தியது. இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சென்னை, ராயப்பேட்டை வெங்கடேஷ்வரர் மெட்ரிக்குலேசன் பள்ளியில்
படிக்கும் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி மினா பரிஹா ‘ஸ்லோகன்’ எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்றார். நேற்று நடந்த பரிசு வழங்கும் போட்டியில் சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
மேலும் முதல் பரிசு பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர் வேதா சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
மேலும் சென்னை ராயப்பேட்டையில், யானைக்குளம் ரெசிடென்சியல் வெல்பேர் அசோசியேஷன் சார்பில் 72வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு யானைக்குளம், வெல்பேர் அசோசியேஷன் சார்பில் பள்ளி
மாணவர்களுக்கிடையே ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் ராயப்பேட்டை வெங்கடேஷ்வரர் (எஸ்விஎம்) பள்ளி யுகேஜி மாணவன் அதீக் அஹமது ஓவியப்போட்டியில் முதல் இடமும், திருக்குறள் போட்டியில் 4வது இடத்தையும் பிடித்தார். மேலும் 4ம் வகுப்பு மாணவன் இலான் அஹமது 2ம் கட்ட திருக்குறள் போட்டியில் 2வது இடத்தையும், ஓவியப்போட்டியில் 4ம் இடத்தையும் பிடித்துள்ளனர். ராயப்பேட்டை போலீஸ் உதவிக்கமிஷனர் லட்சுமணன் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.