- சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
- தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகம் சார்பில் புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோயம்புத்தூர் – நாகர்கோயில் இடையே தினசரி அதிவிரைவு சிறப்பு ரயில் வரும் 8 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
- ண்டிவனம் அடுத்த சாரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் புள்ளிமான் பலியானது.
- புரெவி புயல் எதிரொலியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு டிசம்பர் 3-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- இந்தியாவில் ஊடுருவ பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப் பாதையை கண்டுபிடிக்க இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்றனர்.
- ஐ.பி.எல். கிரிக்கெட், வெஸ்ட் இண்டீசில் நடக்கும் சி.பி.எல்., கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளராக உள்ள நடிகர் இப்போது அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால்பதிக்கிறார்.
- துருக்கி நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு ஒரே நாளில் 30,110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
- குரோஷியா பிரதமர் ஆன்ட்ராஜ் பிளேன்கோவிக்கிற்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது
- வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பதாக பா,ஜ.க தலைவர் எல்.முருகன் தகவல்
- பாகிஸ்தானில் இருந்து கம்போடியா சென்றது ஒற்றை யானை காவன்.. 8 ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு யானையை சந்தித்ததால் உற்சாகம்..!
- தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
- அரசியலமைப்பச் சட்டத்துக்கு ஏற்ப, புதிய தேசிய கல்வி கொள்கை இடஒதுக்கீட்டை உறுதி செய்வதாக மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
- வந்தே பாரத் இயக்கத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை 33 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 6 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும்
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது
திரிகோணமலைக்கு 300 கி.மீ., கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் மையம் – இந்திய வானிலை ஆய்வு மையம்
- புரெவி புயல் எதிரொலியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை.
- கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
- ஜப்பானுக்கு அருகில் உள்ள தீவில் ஏவுகணை தடுப்பை நிறுவியது ரஷ்யா
- வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரி முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை