பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் மாட்டு வண்டியில் வந்து பிரச்சாரம்

*கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் மாட்டு வண்டியில் வந்து பிரச்சாரம்..

*மகாராஷ்ட்ராவில் நாளை முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு..! மால்கள், உணவகங்கள் இரவு 8 மணிக்கு மூட உத்தரவு..

*தஞ்சை மாவட்டத்தில் 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளுக்கு தலா ரூ.5,000 அபராதம். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என நடவடிக்கை -மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவு.

*கர்நாடகா நோக்கி செல்லும் விவசாயிகள்.. – மேகதாது அணை கட்டுவதற்கு எதிப்பு தெரிவித்து தஞ்சை இராஜராஜன் சிலை அருகில் இருந்து, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் காலை 11 மணிக்கு ஊர்வலமாக சென்று, பின்னர் பேருந்துகளில் கர்நாடகா நோக்கி பயணிக்க உள்ளனர்..,

*தில்லியில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,534 பேருக்கு கொரோனா.. கடந்த 24 மணி நேரத்தில் 971 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளார்..

*சேலம் மாவட்டம் – புத்திர கவுண்டன் பாளையத்தை சேர்ந்த அதிமுக ஒன்றிய கவுன்சிகா செல்வி சுப்பரமணியன் இவருக்கு சேர்ந்த குடோனில் 12 மூட்டை வேட்டி சேலைகள் பறிமுதல் பயத்தில் தேர்தல் அதிகாரிகள் எல்லாம் தமிழக முதல்வரின் வலது கரம் இளங்கோவன் ஊர் அது.

*இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி

*மேற்குவங்கம் மற்றும் அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது..

*அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

*வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் முறையாக பணியாற்றாத பறக்கும் படை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம்!.. தேர்தல் செலவின பார்வையாளர் கிருஷ்ண கெடியா அளித்த புகாரின் பேரில் கோவை ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கை!

*தி.மு.க.வுக்கு எதிராக பெண் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

*இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 30,386 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 291 பேர் உயிரிழப்பு..

*கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் , கோவை புதூர் பகுதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியபடி பிரச்சாரம் மேற்கொண்டார்..

 

 

 

Translate »
error: Content is protected !!