பீகார் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 71 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு

பீகார் சட்டசபைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில், மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி அக்டோபர் 27, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி – பாஜக கூட்டணிக்கும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி – காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இக்கூட்டணியில் லாலுவின் மகன் தேஜஸ்வி, முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

அந்த கூட்டணியில் இருந்து விலகி ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும், தனது லோக்ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில், நாளை மறுதினம் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 71 தொகுதிகளில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு நடைபெறும் முதலாவது தேர்தல் பீகார் தேர்தல்களம் அனைவரின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. –

Translate »
error: Content is protected !!