அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா?

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் பரவிய நிலையில், அது தவறான தகவல்; அமைச்சர் நலமுடன் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சட்டசபை தேர்தல் நடைபெறும் பீகாரில், தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தனது சொந்த மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். 

பின்னர் அவர் புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக செய்திகள் பகிரப்பட்டன. இந்த நிலையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அலுவலகம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதை மறுத்துள்ளது. 

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. அமைச்சர் பாதுகாப்பாக இருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், அமைச்சர் பயணித்த ஹெலிகாப்டரின் ரோட்டார் பிளேடு பாதிக்கப்பட்டிருந்தது. இதை விமான நிலையத்திலேயே அதிகாரிகள் கண்டறிந்து சரிசெய்துவிட்டதாக, அதில் கூறப்பட்டுள்ளது. 

இதேபோல், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், நான் ஹெலிகாப்டரில் ஏறிய பிறகே, அதன் ரோட்டார் பிளேடு பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. நான் நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!