ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் துர்கா ஸ்டாலின் இன்று சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் 108 வைணவத் திருத்தலங்கள் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தமிழக மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள்,சுற்றுலா பிரியர்கள் வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தந்தார்.
அவருக்கு இந்து சமய அறநிலை துறை சார்பிலும் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் கருடாழ்வார் சன்னதி வழியாக மூலவர் ரங்கநாதரை தரிசனம் செய்யச் சென்றார், பின்னர் அங்கு இருந்து பேட்டரி கார் மூலம் ரங்கநாயகி தாயாரை தரிசனம் செய்ய சென்றார்.
அதனைத் தொடர்ந்து ராமானுஜர் சந்நிதி சக்கரத்தாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மனை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.