ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் செல்லுமா? என்சிடிஇ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் எனப்படும் என்சிடிஇ அறிவித்துள்ளது.

அரசின் இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, அனைத்துவகை பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேருவதற்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வானது, இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்தலாம்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள், இதுவரை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற சூழலே இருந்து வந்தது. இனி தேர்வெழுதி வெற்றி பெறுவோருக்கு டெட் சான்றிதழ் ஆயுள் முழுக்க செல்லுபடியாகும் என்று, என்.சி.டி.இ. அறிவித்துள்ளது.

இது தொடர்பாக என்சிடிஇ இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘டெட் தேர்வில் தேர்வு எழுதி வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ், ஆயுட்காலம் வரை செல்லும். ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களின் நிலை தொடர்பாக சட்ட ஆலோசனை செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!