ஆன்லைன் ஊடகங்கள், ஓடிடி தளங்களுக்கு ‘செக்’: உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு

சமூக ஊடங்களான பேஸ்புக், டிவிட்டர், ஆன்லைன் செய்தி ஊடகங்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவை இனி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்; இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அச்சு ஊடகங்களை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவும், செய்தி சேனல்களை செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பும், விளம்பரங்களை விளம்பரங்கள் தரநிலை கவுன்சிலும், திரைப்படங்களை மத்திய சென்சார் வாரியமும் தணிக்கை செய்து வந்தன.

டிஜிட்டல் ஊடகங்களை இதுவரை கட்டுப்படுத்த எந்த ஒரு அரசு அமைப்போ, சட்டமோ இல்லாத நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ், ஆன்லைன் ஊடங்கள் வருவதற்கான அறிவிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.

அதன்படி, ஆன்லைன் ஊடகங்களில் திரைப்படங்கள், வெப் சீரிஸ், செய்திகள் மற்றும் நாட்டுநடப்பு குறித்த உள்ளடக்கங்கள், இனி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதுவரை கட்டுப்பாடு இல்லாமல் இருந்த அவற்றுக்கு, அதற்கு இனி கடிவாளம் கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஊடகச் சுதந்திரத்தை குறைக்க, அல்லது தடுக்கும் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்று உறுதி வழங்கினார்.

ஆனால் மத்திய அரசு இப்போது டிஜிட்டல் மீடியாக்களைக் கட்டுக்குள் கொண்டு வருமாறு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
=

Translate »
error: Content is protected !!