இந்தியாவின் இறையாண்மையை காக்க அமெரிக்கா துணை நிற்கும் என்று, டெல்லியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
சீனாவுடனான எல்லை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் இன்று புதுடெல்லியில் பேச்சு வார்த்தை நடத்தினர். அதேபோல், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ இருவரும் புதுடெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், இறையாண்மையை பாதுகாக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவை அளிக்கும். சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகத்துடன் நட்பு கிடையாது என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன் கொஞ்சம் கூட நட்புடன் இல்லை என்பதை எங்கள் தலைவர்களும் குடிமக்களும் அறிந்துள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் அமெரிக்காவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. இந்தியாவின் இறையாண்மை, சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும்
கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட 20 பேர் உட்பட, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்காக தியாகம் செய்த இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலான வீரர்களை கௌரவிப்பதற்காக நாங்கள் தேசிய போர் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டோம் என்று அவர்கள் கூறினர்.