கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகாரில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீகார் சட்டசபைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (அக். 28) நடைபெறுகிறது.

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமாரின் பதவி காலம் நிறைவடையும் நிலையில் பீகாரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

தொகுதிப்பங்கீடு பிரச்சினையால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லோக்ஜனசக்தி தனித்து போட்டியிடுகிறது. இதைப்போல ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள மகா கூட்டணி தேர்தல் களத்தில் உள்ளது.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் முதல் கட்டமாக 27 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரொனா காலத்தில் நடைபெறும் முதலாவது தேர்தல் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு கையுறை, சனிடைசர் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபாலில் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் 10 66 பேர் களத்தில் உள்ளனர். இவர்களை தேர்வு செய்யும் தகுதியை 2 கோடி வாக்காளர்கள் பெற்றுள்ளனர்.

பீகார் தேர்தலில் இரண்டாம் கட்டமாக நவம்பர் 3ம் தேதி 94 தொகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக நவம்பர் 7ம் தேதி 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Translate »
error: Content is protected !!