தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து விட்டு தன் ஹோட்டல் அறைக்கு வந்த அமித்ஷா பாஜகவின் நிர்வாகிகளோடு கலந்தாலோசனை செய்துள்ளார்.
கள நிலவரம் பற்றி மத்திய உள்துறை ரிப்போர்ட்டை எடுத்து வீசியுள்ளார் அமித்ஷா. என்ன தான் நடக்கிறது.. தமிழ்நாட்டில் என்று தன் நிர்வாகிகளை பார்த்து கோவப்பட்டாராம். இதுவரை அமித்ஷா இவ்வளவு கோவப்பட்டு நாங்கள் யாரும் பார்த்ததில்லை என்றார் அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக நிர்வாகி.
அமித்ஷா வின் கோவத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் பாஜக உட்கட்சி பூசலும் அவர்கள் தமிழகத்திற்கு வகுத்த திட்டம் ஒன்று கூட பலனளிக்கவில்லை என்றும் 20 தொகுதிகளில் பல இடங்களில் பாஜக டெப்பாசிட் இழக்கும் என்று உள்துறை கொடுத்த ரிப்போர்ட்டும் தான் அதற்கு காரணம் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.
எடப்பாடி தாயை குறித்து ஆ. ராசா பேசியதாக பாஜக ஐடி செல்கள் பரப்பிய வீடியோவிற்கு மக்களிடையே அனுதாபம் ஏற்படாமல் தன் தாயையே தேர்தலுக்காக பயன்படுத்துகிறாரே எடப்பாடி என்று தன் சொந்த சமூகத்திடமே மதிப்பை இழந்திருக்கார் முதல்வர் என்கிறது அந்த ரிப்போர்ட்.
மேலும் தலித் மக்களிடத்தில் ராசா குறிவைக்கப்படுவது சாதி ரீதியான அடக்குமுறை என்றும் ஒரு கருத்துருவாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து வட மாவட்டத்தில் வன்னியர் அல்லாதோர் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு இதனால் இன்னும் வலிமை பெற்றுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.
தென் மாவட்டங்களிலும் பாஜகவின் திட்டங்கள் அந்த கட்சிக்கு எந்த பலனையும் தரவில்லை என்கிறார்கள். தேவேந்திர குல வேளாளர் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் பாஜக அச்சமூகத்தினருக்கு ஒரு சீட் கூட ஒதுக்காதது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பட்டியலின வெளியேற்றம் குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததும் அம்மக்கள் மத்தியில் கோவத்தை ஏற்படுத்துயுள்ளது…
மேற்கு மாவட்டங்களில் மட்டுமே பாஜக இந்த முறை ஓரளவிற்கு செல்வாக்கு உள்ளதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் அதற்கும் வட இந்தியர்களின் வெளிப்படையான பாஜக ஆதரவு, யோகியின் வருகையின் போது நடந்த வன்முறை வெறியாட்டம் போன்றவற்றை மக்கள் ரசிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இப்படியே போனால் தமிழ்நாட்டை பாஜக மறந்தவிட வேண்டியது தான் என்று அமித்ஷா நிர்வாகிகளை நோக்கி கடுகடுவென வெடித்து தள்ளினாராம்.
“இவங்க ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஏதும் நல்லது செய்திருந்தால் அதை வெச்சாவது ஓட்டு கேட்கலாம். ஒன்றையும் செய்யாமல் மக்கள் முன் போனால் ஓட்டு போட இது என்ன உத்திர பிரதேசமா?? வெறும் ராமர் கோவிலை காட்டி ஓட்டு கேட்க. இருந்த கொஞ்ச மரியாதையையும் அந்த சின்ன பையன் செங்கலை காட்டி காலி பன்னிட்டான். இதில் இவர் நம்மை பார்த்து கோவப்படுவது எந்த விதத்தில் நியாயம்” என்று புலம்புகிறார்கள் கமலாலய நிர்வாகிகள். ஆக மொத்தம் பாஜகவிற்கு இந்த தேர்தல் பல படிப்பினைகளை கற்றுத் தந்துள்ளது. அதிலிருந்து பாடம் கற்கிறார்களா என்று பார்ப்போம்…