டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினி: முழு ஓய்வெடுக்க வேண்டும் டாக்டர்கள் அட்வைஸ்

ரத்த அழுத்தம் காரணமாக ஐதாபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த்திற்கு உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரத்திற்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறைந்தபட்ச உடற்பயிற்சி செயல்பாடு இருக்க வேண்டும் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும், கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அவர் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், கொரோனா தொற்று வராமல் இருக்க வெளியில் செல்ல வேண்டாம் என்றும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் இன்று மாலை சென்னைக்கு வந்தார்.

Translate »
error: Content is protected !!