தந்தை பெரியார் ஒழிக்கத்தான் பாஜக இங்கு வந்திருக்கிறது – ப. சிதம்பரம் கடும் கண்டனம்

சென்னை,

தந்தை பெரியார் ஒழிக்கத்தான் பாஜக இங்கு வந்திருக்கிறது என பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா பேசியிருப்பதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான . சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு காலத்தில் கழகங்கள் இல்லாத தமிழகம் என ஊர்தோறும் பிரசாரம் செய்தது பாஜக. ஆனால் பாஜகவின் இந்த பிரசாரம் போணியாகவில்லை. படுதோல்வியைத்தான் தந்தது. இதனால் இந்த முறை வேறுவழியே இல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதனால் திராவிட எதிர்ப்பு முழக்கத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சியால் தைரியமாக முன்வைக்க முடியவில்லை.

ஆனால் வெளியில் இருந்து வரும் இந்துத்துவா தலைவர்கள் அப்பட்டமாக தந்தை பெரியார், திராவிடர் இயக்கங்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கின்றனர். இதில் ஒன்றுதான் தேஜஸ்வி சூர்யா என்பவர், பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகத்துக்கு பாரதிய ஜனதா கட்சி வந்திருக்கிறது. தேஜஸ்வி சூர்யாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் . சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில்பெரியாரிசம்‘ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்சனாதன தர்மம்என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.

தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா.

தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக EPS-OPS கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?. இவ்வாறு .சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!