அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு தான் கூட்டணி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அதிமுக பிரசார பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது:
எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் இப்போது இல்லை. எதிரும் புதிருமாக பணியாற்றிய தலைவர்கள். இப்போது இல்லாததால் இடையில் புகுந்து விட சிலர் நினைக்கிறார்கள். தமிழகத்தின் வரலாறு அவர்களுக்கு தெரியாது, தமிழகம் பெரியாரின் மண். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்து பகுத்தறிவு இயக்கம் உருவாக்கியது, பகுத்தறிவை சட்டமாக்கிய அரசியல் கட்சி திராவிட இயக்கத்தின் அடித்தளம் தான் தமிழ்மண் முதன்முதலாக 67 ஆம் ஆண்டு தேசியக்கட்சிகளின் பிடியில் இருந்து தென்னிந்தியாவில் திமுக ஆட்சி அமைந்தது, திராவிட இயக்கத்தை பற்றி தெரியாமல் தமிழகத்தில் நுழைய முற்படும் தேசிய கட்சிகளும் சந்தரப்பவாதிகளும் இதை புரிந்துகொள்ள வேண்டும்,
அண்ணா எம்ஜிஆர் ஜெயலலி்தா போன்ற தலைவர்கள் திராவிட இயக்கத்தின் அடையாளங்கள்,. தேசிய கட்சிகளில் உள்ள சிலர் 50 ஆண்டுகளாக திராவிட இயக்கத்தினர் தமிழகத்தை கெடுத்து விட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள் அவர்களுக்கு நான் கேட்க விரும்புவதெல்லாம், ஜெ மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது, மத்திய அரசின் விருதுகளை பெற்று சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் திராவிட இயக்கத்தினர் நடத்தி வருகிறார்கள், உணவு உற்பத்தியில் தமிழகம் மகத்தான சாதனை படைத்து வருகிறது மருத்துவத்திலும் தமிழகம் ஒரு பெரும் புரட்சியே நடத்தி வருகிறது, ஜெயலலிதாவுக்கும் ஒரு படி மேலாக சென்று மினி கிளினிக்கை இந்தியாவிலேயே முதன்முதலாக கொண்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான், உயர்கல்வியில் 49 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையைப் பெற்றிருக்கும் மாநிலம் தமிழகம் தான், இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில் 50 சதவீதம் கல்லுாரிகள் தமிழகத்தில் தான் இருக்கின்றன, இவைகள் எல்லாம் 50 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் ஆட்சியில் வந்தவை .இந்த திராவிட இயக்கத்திற்கு அண்ணா – எம்ஜிஆர், ஜெயலலிதா, போன்றவர்கள் தான் சொந்தக்காரர்கள், கருணாநிதி அல்ல:
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் இபிஎஸ் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார், இதிமுக தலைவர் ஸ்டாலின் தனது மகனை பக்கப்பலமாக வைத்து வாரிசு அரசியல் நடத்தி வருகிறார், மத்தியில் உள்ள வேளாண் சட்டங்கள் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கப்படுகிறது, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. வரும் சட்டமன்றத்தேர்தலில் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும், அடுத்து அதிமுக ஆட்சி அமைந்தால் 50 ஆண்டுகளுக்கு அந்த ஆட்சியை அசைக்க முடியாது,. ஜெயலலிதா சொன்னபடி 100 ஆண்டுகளானாலும் அந்த ஆட்சியை அழிக்க முடியாது, எனவே கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம்.
இவ்வாறு பேசினார்.