புதுச்சேரி,
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.99% வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் 2மணி நிலவரப்படி 46.36% வாக்குகள் பதிவாகி உள்ளது. தற்போதைய நிலையில் வாக்குப்பதிவு தமிழகத்தை விட புதுச்சேரியில் வேகமாக உள்ளது. புதுச்சேரி முழுவதும் 10 லட்சத்து 4 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 341 பேர் ஆண் வாக்காளர்கள, 5 லட்சத்து 31 ஆயிரத்து 383 பேர் பெண் வாக்காளர்கள்,இ இதர பிரிவினர் 116, புலம்பெயர்ந்த இந்தியர்கள் 357, பணி வாக்காளர்கள் 310 பேர் ஆகியோர் அடக்கம்.
புதுச்சேரி முழுவதும் 635 இடங்களில் ஆயிரத்து 558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்காக 1558 கண்ட்ரோல் யூனிட், 1677 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது/ புதுச்சேரியில் வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக ஆயிரத்து 558 வி.வி.பாட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.. புதுசேரியில் 278, காரைக்காலில் 30, மாகியில் 8, ஏனாமில் 14 என 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் உள்ள 16 ஓட்டுச்சாவடிகள் மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 ஆயிரத்து 928 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்து 546 பேர் தபால் ஓட்டளித்துள்ளனர்.. இதேபோல், கொரோனா பாதித்து தனிமையில் உள்ள 34 பேரும், அத்தியாவசிய பணியில் உள்ள 68 பேரும், வாக்குச்சாவடி பணியில் உள்ள 8 ஆயிரத்து 117 பேரும் தபால் ஓட்டளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் இதுவரை 12 ஆயிரத்து 693 பேர் தபால் ஓட்டளித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களில் யார் யார் எங்கு போட்டியிடுகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டை தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் களமிறங்கியுள்ளார். புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகளின் வெளியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். புதுச்சேரி கதிட்ரல் வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார் ,
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் இன்று காலை வாக்கு பதிவு தொடங்கியவுடன் வாக்கு இயந்திரம் பழதடைந்தது ஒருமணிநேரம் காலதாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது, புதுச்சேரியில் பிற்பகல் 3 மணி வரை 65.99% வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரி – 66.36 % காரைக்கால்– 64.86% மாஹே – 56.53% ஏனாம் – 71.69% வாக்குகள் பதிவு.. தமிழகத்தைவிட புதுச்சேரியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக உள்ளது.
தமிழகத்தில் 2மணி நிலவரப்படி 46.36% வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு தமிழகத்தை விட புதுச்சேரியில் வேகமாக உள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணி மற்றும் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி இடையே கடும் மோதல் நிலவுகிறது. அதிகப்படியான வாக்குப்பதிவின் மூலம் புதுச்சேரியில் ஏதோ ஒரு கூட்டணிக்கு பெரிய பாதிப்பு வரலாம். தரமான சம்பவம் எந்த கட்சிக்கு நிச்சயம் இருக்கிறது. யாருக்கு என்பதை காத்திருந்து பார்ப்போம். .