திமுகவுக்கு அரசியல் கண்ணியம் தெரியவில்லை: ஒவைசி கடும் குற்றச்சாட்டு

சென்னை,

திமுகவுக்கு அரசியல் கண்ணியம் தெரியவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டினார்.சென்னை ராயப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமமுக தோ்தல் அறிக்கை வெளியிடும் பொதுக் கூட்டத்தில் ஒவைசி பங்கேற்றுப் பேசியது:திமுக சார்பில் சிறுபான்மையினா் பிரிவு மாநாடு நடத்தப்படுவதாகவும் அதில் பங்கேற்க வேண்டுமெனவும்,

அந்தக் கட்சியின் நிர்வாகி நேரில் வந்து எனக்கு அழைப்பு விடுத்தார்.உத்தர பிரதேசத்தில் வேறொரு நிகழ்ச்சி இருப்பதாகவும், திமுகவின் கூட்டத்தில் பங்கேற்பது சிரமம் எனவும் நான் அவரிடம் தெரிவித்தேன்.ஆனால், திமுகவின் கூட்டத்தில் பங்கேற்றே ஆக வேண்டுமென அந்தக் கட்சியின் நிா்வாகி எனது வீட்டுக்கு வந்து வற்புறுத்தினாா். இதனால் வேறு வழியின்றி திமுகவின் கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக் கொண்டேன். நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்ட இரண்டு மணி நேரத்தில் எனக்கு அழைப்பே விடுக்கவில்லை என்று திமுக தரப்பினா் கூறினா்.

திமுக நிர்வாகி என்னை எனது வீட்டில் வந்து சந்தித்த புகைப்படமும், விடியோ காட்சியும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொலைக்காட்சிகளில் வெளியான காட்சிகளையும் மறுத்து, தங்களது கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என திமுகவினா் கூறினா்.இதிலிருந்து திமுகவுக்கு அரசியல் கண்ணியம் என்ன என்பது தெரியவில்லை. அவா்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. எங்களுக்குத் தேவை அரசியல் பதவி, பொறுப்பு அல்ல. மரியாதை, கண்ணியம் மட்டும்தான். அதனை எங்களுக்கு யார் தருவார்களோ  அவா்களை மதிப்போம் என்று பேசினார்.ஒவைசி.

Translate »
error: Content is protected !!