துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 800 பேர் வரை படுகாயமடைந்தனர். அடுத்தடுத்து 196 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டன.
துருக்கியின் இஸ்மிர் நகரில் தான் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டதாக, செய்தி வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்தன; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 800 பேர் வரை படுகாயமடைந்ததாகவும், அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியின் கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது. பல அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத கடல் அலையில் கடலோரப்பகுதி வீடுகளில் இருந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன.
துருக்கியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின் இதுவரை 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவு, இதில் ரிக்டர் அளவில் 4-க்கும் மேலாக 23 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது.
துருக்கியில் கடந்த 1999ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.