நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன; சென்னை புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ‘நிவர்’ புயல், நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே, அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஏழு மாவட்டங்களில் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இச்சூழலில், புயலால் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரு மார்க்கங்களிலும் நாளை ஒருநாளைக்கு ரயில் சேவை இருக்காது என்று, தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன.