தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் காவல்துறை தலைவர் திறந்து வைத்தார்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் காவல்துறை தலைவர் திறந்து வைத்தார்

தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை , இன்று மதுரை மண்டல .ஜி முருகன் திறந்துவைத்தார். ஆண்டிபட்டி அருகேயுள்ள .விலக்கு பகுதியில் தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, அவசர சிகிச்சை பிரிவு அறையின் அருகே .விலக்கு புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில், புதிய புறக்காவல் நிலையம் அமைக்க மேனகா மில்ஸ் உரிமையாளர் மணிவண்ணன் என்பவர் 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

இதனை அடுத்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று புறக்காவல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் மதுரை மத்திய மண்டல .ஜி முருகன் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி, தேனி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

 

Translate »
error: Content is protected !!